சர்வதேச
அளவில் உயர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை
தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்
கேட்ஸ் 750 மில்லியன் டாலர்களை அளித்துள்ளார்.
ஜெனிவாவை
தலைமையிடமாகக் கொண்ட எய்ட்ஸ், காசநோய், மலேரியா நோய்களுக்கு எதிராகப்
போராடி வரும் அமைப்பிற்கு, பில் கேட்ஸ் இந்த நிதியை அளித்துள்ளார்.
உடனடியாக பணத்தைப் பெற்று ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில்
இந்த நிதியுதவி அமைந்துள்ளது.
பொருளாதார
நிலை தற்போது கடுமையாக இருந்தாலும், ஏழை மக்களுக்கு உதவுவதில் எந்த
பிடித்தமும் செய்ய முடியாது என்று பில் கேட்ஸ் கூறினார்.