உடற்பருமன் அதிகரிப்பதற்கான காரணங்கள் சில...

2005 வரை எடுக்கப்பட்ட ஆய்வுபடி உலகில் 40 கோடி பேர் அதிக உடல் எடை கொண்டவர்கள். இது 9.8 சதவீதம் ஆகும். ஆண்களைவிட பெண்களே அதிக அளவில் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றனர்.இந்தியாவில் நகரப்பகுதிகளில் வாழும் மக்களில் 5.5 சதவீதம் ஆண்களும், 12.6 சதவீதம் பெண்களும் அதிக எடை கொண்டவர்கள். இதில் நகரக் குடிசைவாசி ஆண்கள் 1.9 சதவீதம், பெண்கள் 7.2. சதவீதம். கிராமங்களில் அதிக எடை உள்ளவர்கள் குறைவு. ஆண்கள் 1.6 சதவீதம், பெண்கள் 3.8 சதவீதம். 

சமூக பொருளாதாரமும் அதீத எடைக்கு காரணமாகிறது. உயர் சமூகப் பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களின் அதீத உடல் எடை 10.4 சதவீதமாக இருக்கிறது. குறைந்த சமூகப்பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் பெண்களில் 0.9 சதவீதம் மட்டுமே அதிக எடை கொண்டவர்கள் இருக்கிறார்கள். சமூகப் பொருளாதார அந்தஸ்து உயரும்போது எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஏழைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. 

குறைந்த கலோரிகள் உள்ள உணவு, அதிக நார்ச்சத்துள்ள உணவு, அதிகம் குடிநீர், புகைத்தல் மதுபானம் அருந்துவதை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாது கடைபிடித்தாலே உடல் எடையைக் குறைக்கலாம். 

1 மணி நேரம் வேகமாக நடத்தல், ஜாகிங் ஆகியவற்றுடன் ஆரோக்கியமான சமச்சீரான உணவு பெரியவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக வேகமாக நடந்தால் இருதய நோய்கள், மாரடைப்பு வரும் வாய்ப்புகளையும் குறைக்கும். 

அதீத உடல் எடை காரணமாக உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது மாதவிலக்கு பிரச்சினைகளுக்கு காரணியாகிறது. அதீத உதிரப்போக்கு அல்லது குறைந்த உதிரப்போக்கு ஏற்படவும் வழிவகுக்கிறது. இதுவே அதீத உடல் எடை உள்ள குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைவதற்கும் காரணமாகும். அதீத உடல் எடை குழந்தையின்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என்று ஆய்வுகளும் உறுதி செய்துள்ளன. 

ஹார்மோன் பிரச்சினை மூலம் அதீத உடல் எடைக்கும் ஆண்- பெண் செக்ஸ் வாழ்க்கைக்கும் உள்ள நேரடித் தொடர்பை உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அதீத உடல் எடை உள்ள இருவரும் முழுமையான செக்ஸ் உறவில் ஈடுபடும்போது உடல் ரீதியாக அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்படும். அதனால் தம்பதிகளால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியாது. உடல் எடையை குறைப்பது மூலம் செக்சை முழுமையாக அனுபவிக்கலாம். 

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க 

* வயது கூடும்போது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிக்கும் சக்தி குறைவது.

* உடலுழைப்பு குறைவது.

* குடும்பப் பரம்பரை காரணம்.

* தைராய்டு நோய் காரணமாக ஹார்மோன் அளவுகளில் சமநிலை தவறுவது.

* பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வது.

* மூளையில் இருக்கும் ஹைபோதாலமஸ், பசி மற்றும் பாதுகாப்பு உணர்வைத் தூண்டுகிறது. இதன் காரணமாகவே திருப்தி ஏற்பட்ட பிறகே உண்பதை நிறுத்துகின்றனர். இரண்டும் இணைந்து செயல்படாமல் தொடர்ந்து உட்கொண்டே இருப்பது.

* குழந்தைகளுக்கு தாய்மார்கள் அதிக உணவை ஊட்டிக் கொண்டே இருப்பது.

* அதிக கொழுப்பு சத்துள்ள பிட்சா, பர்கர், கேக், குளிர்பானங்கள் அருந்துவது.

* தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போதும் ஏதாவது உணவைக் கொறித்துக்கொண்டே இருப்பது.

* உணவை வீணாக்கக்கூடாது என்ற உணர்வில் பெண்கள் மீதம் இருப்பதையும் சாப்பிடுவது.

* மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாமை, உணவுக்கட்டுப்பாடு இல்லாமை. நாள் முழுக்க நடைபெறும் அலுவலகக் கூட்டங்கள், கணினியில் நீண்ட நேரம் வேலை பார்ப்பது.

* புகைத்தல் மற்றும் மதுபானம் அருந்துதல் போன்ற பல காரணங்களாலும் உடல் குண்டாகிறது
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now