நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் ஆங்காங்கே போக்குவரத்துகளுக்கு தடை
ஏற்பட்டுள்ளது. அக்குரஸ்ஸ கொடபிட்டிய வழியாக பிட்டபத்தர வீதியின் பாணதுகம
பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது. நில்வளா கங்கை பெருக்கெடுத்ததால் வீதிகளில் நீர் புகுந்து
நில அரிப்பு ஏற்ப்பட்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
ஆறு பெருக்கெடுத்ததால் மாத்தறை கும்புறுகிட்டிய வழியாக முலடியன வீதி,
மாகதுர மற்றும் ரன்சேகொட ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, மாத்தறை மாவட்டத்தின் தாழ்நிலப்
பகுதிகள் பல நீரில் மூழ்கியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.