நாட்டின் எதிர்காலம் குறித்து ரணிலுக்கு கவலையாம்!!

ranil
கல்வித்துறை வீழ்ச்சியடைவதன் காரணமாக, நாட்டின் எதிர்காலம் குறித்து அச்சம் ஏற்படுவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர, களனி உள்ளிட்ட பல்கலைக் கழகங்களை பிரதி நிதித்துவப்படுத்தும் மாணவர்களுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை மாணவ பிரிதிநிதிகள் அவரிடம் கையளித்தனர்.
 
இந்த அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு எதிர் கட்சித் தலைவரினால், மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்காக ருவான் விஜயவர்தன, அகில விராஜ் காரியவசம் மற்றும் அஜித் பீ. பெரேரா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டுள்ள, பிரச்சனைகள் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் மற்றும் கட்சியினுள் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்த குழு ஆராயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பான பிரச்சனைக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
 
இது தொடர்பான குற்றச்சாட்டை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் முன் வைக்கிறார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now