ஆசன பட்டி தொடர்பான சட்டம்

ஆசன பட்டி அணியாது பயணிக்கும் போது அமுல்படுத்தப்படும் தண்டனையை சீர்திருத்த காவற்துறை மா அதிபர் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன வெளியிட்டுள்ளார்.

                                                         http://www.mastersoftrivia.com/blog/wp-content/uploads/2011/10/seatbelt_jpg.jpg 
ஆசன பட்டி அணியாதவர்களுக்கு இதுவரை நீதிமன்றத்தினாலே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த முறைமை சீர்திருத்துமாறு ஜனாதிபதி காவற்துறை மா அதிபருக்கு நேற்றைய தினம் பணித்துள்ளதாகவும் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இனி நீதிமன்றம் செல்வதற்கு பதிலாக அபராத பணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now