வைத்தியசாலைக்கு என வழங்கப்படும் மருந்தை அந்த வைத்தியசாலையில்
பொறுப்பதிகாரியாக இருக்கும் வைத்தியர் தனது தனிப்பட்ட வைத்தியசாலைக்கு
எடுத்து சென்று அவற்றை நோயாளர்களுக்கு விற்று வருகிறார் என்றும், ஊழல்
மோசடிகள் பற்றி சுட்டிக்காட்டிய போதிலும் மாவட்ட சுகாதார அத்தியட்சகர்
அலுவலகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பிரதேச மக்கள்
தெரிவிக்கின்றனர்.
ஊழல் பேர்வழியை அகற்று என கோசங்களை தாங்கியவாறு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கொட்டும் மழையிலும் அப்பகுதி பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

