சர்வதேச நீதிமன்றில் மஹிந்தவை குற்றவாளியாக நிறுத்த அமெரிக்கா முனைப்பு -விமல்!




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சர்வதேச நீதிமன்றில் குற்றவாளியாக நிறுத்துவதற்கு அமெரிக்கா முனைப்பு  காட்டி வருவதாக வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.பிளெக் உள்ளிட்ட முக்கிய இரு இராஜதந்திரிகள் சிறிலங்காவுக்கு வருகைதரவுள்ள நிலையில் விமல் வீரவன்ச இக் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 27ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் நோக்கிலேயே அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது. மேலும் சிறிலங்காவுக்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளிடம் கையொப்பங்களைத் திரட்டும் பணிகளையும் அமெரிக்கா ஆரம்பித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதே அமெரிக்காவின் பிரதான இலக்கு எனவும் ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஜனாதிபதியை குற்றவாளியாக ஆஜர் செய்ய முயற்சி எடுக்கப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now