பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என திணைக்களத்தின் கடமைநேர வானிலை நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இலத்திரனியல் உபகரணங்களின் பயன்பாட்டை தவிர்த்துக்கொள்வதன் ஊடாகவும், மைதானங்கள் போன்ற திறந்தவெளி பிரதேசங்களில் நிற்பதை தவிர்த்துக்கொள்வதன் ஊடாகவும் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கொட்டாவ, பின்ஹேன, கெமுனுபுர பிரதேசத்தில் மின்னல் தாக்கத்தினால் பல வீடுகளில் இருந்து இலத்திரனியல் உபகரணங்கள் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு 7.20 அளவில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் சுமார் 15 வீடுகளில் இருந்த இலத்திரனியல் உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.
