கொள்ளுப்பிட்டிய கடற்கரையில் இரவு நேரத்தில் அலைந்து திரிந்த நிலையில்
மேற்படி பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பெண் பொலிஸாரினால்
கைது செய்யப்படும்போது தான் சுற்றித் திரிந்தமைக்கு முறையான காரணத்தை
தெரிவிக்கவில்லையென நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடோடி கட்டளைச்சட்டத்தின் பிரிவு 3 (பி) இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமொன்றை அப்பெண் புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதையடுத்து மேற்படி பெண் 10 ரூபாயை அபராதத் தொகையாக செலுத்தவேண்டுமென நீதிபதி கனிஷ்க விஜேரட்ன கட்டளையிட்டுள்ளார்.
