ஓட்டமாவடியில் ஞாயிறன்று கூடிய இணக்க சபை, குற்றவாளியான ஏறாவூரைச்
சேர்ந்தவரும் தற்போது இரத்தினபுரி பகுதியில் பேஷ் இமாமாகப் பணியாற்றும்
ஒருவருக்கே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த நபர் கடந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து இந்தப் பெண்ணை முகம்
தெரியாத நிலையில் இரவு பகலாக தொலைபேசி மூலம் தொல்லைப்படுத்தி வந்த
ஆதாரங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதன் மூலம் நிரூபிக்கப்பட்டன.
குற்றவாளிக்கு இது நல்லதொரு பாடம் என்றும் இப்படிப்பட்ட துஷ்ட நடத்தை
உள்ளவர்களுக்கெதிராக பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றும் இந்த சம்பவம் உணர்த்தியிருப்பதாக பாதிக்கப்பட்டவரான
திருமதி ஜே. எப். காமிலா தெரிவித்தார்.
இணக்கசபை மத்தியஸ்தர்களான மௌலவி யூ. ஏ. அப்துல் மஜீட், மற்றும் திருமதி
உதுமாலெப்பை ஹபீலா, ஏ. றாசிக் ஆகியோர் குற்றவாளிக்கு இந்தத் தீர்ப்பை
வழங்கி வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

