பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது சட்டநடவடிக்கை
மஸ்கெலியா மற்றும் நல்லதண்ணி பிரதேசங்களில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட
பரிசோதனையின் போது பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த 30
வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவனொளிபாத யாத்திரிகர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் நலன் கருதி தாம்
இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதகர்கள்
தெரிவித்துள்ளனர்.
இவ்வியாபாரிகள் மீதான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.