இந்த பெற்றோல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.
உலக சந்தையில் தற்போதுள்ள விலைகளின் பிரகாரம் இந்த பெற்றோல் விலைமனு கோரலின் அடிப்படையில் கொள்வனவாளர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிடுகின்றது.
இந்த பெற்றோல் தொகையை கொள்வனவு செய்த விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்ய முடிந்துள்ளதாகவும் இதன் மூலம் பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்நோக்கியுள்ளதாக நட்டத்தை முழுமையாக ஈடுசெய்ய முடிந்துள்ளதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது.
இதேவேளை சர்ச்சைக்குரிய இந்த பெற்றோலைப் பயன்படுத்தியதால் பழுதடைந்த வாகனங்களுக்காக இழப்பீடு செலுத்துவதற்கு விநியோக நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளதாக பெற்றோலிய தொழிற்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
