வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதி புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவியாக நாளாந்தம் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக உள்ளூர் வர்த்தகர்கள், விவசாயிகள், சிறு கைத்தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது தமக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ள அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள சில பத்திரிகை நிறுவனங்கள் மின் பிறப்பாக்கிகளின் உதவியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



