சுனாமி
எச்சரிக்கை கோபுரம் செயற்படாமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி சுனாமி நிலைமை பற்றி
அறிவிக்கப்பட்ட போதிலும், எச்சரிக்கை கோபுரங்களிலிருந்து உரிய முறையில்
எச்சரிக்கை விடப்படவில்லை என தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார்.
சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் உரிய முறையில் இயங்கவில்லை என நெத் வானொலி சேவை முதல் முதலில் செய்தி வெளியிட்டிருந்தது.
திருகோணமலை மாவட்டத்தில் ஏழு சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் இயங்கி வருகின்றன.
எனினும், இவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக உரிய முறையில் இயங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.



