தமிழ், முஸ்லிம் கட்சி பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ள இந்திய நாடாளுமன்ற குழு


இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் தமிழ், முஸ்லிம் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
 

வடக்கு, கிழக்கு, மலையகம் கொழும்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்தக் குழுவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் நோக்கில்  இவர்களின் இந்த விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now