கோழி இறைச்சி கிலோ ஒன்றுக்கான விலையை அதிகரிக்கும் படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக் கோரிக்கையை இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம், நுகர்வோர் அதிகார சபையிடம் விடுத்துள்ளது.
தற்போது கோழி இறைச்சி கிலோ ஒன்றின் ஆகக் கூடிய விலை 350 ரூபா ஆகும். கோழி இறைச்சி கிலோ ஒன்றிற்கான விலையை 440 ரூபாவாக அதிகரிக்கும் படியே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.