தனித் தமிழீழம் அமைக்க ஐ.நாவின் கண்காணிப்பில்
பொதுவாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு, திமுக தலைவர் மு.கருணாநிதி ஆதரவு
தெரிவித்துள்ளதை அடுத்தே, அவரைக் கடுமையாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய
ராஜபக்ச விமர்சித்துள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழர்களை விட மிகவும் அதிகமான தமிழர்கள்
தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். அவரால் இலங்கையில் ஈழத்தை உருவாக்க முடியாது.
இது ஒரு இறைமையுள்ள நாடு.
ஈழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். இலங்கையில் இப்போது போர் இல்லை. இன இணக்கப்பாடு உள்ளது.
எல்லோருடைய வாழ்வும் அமைதியாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களை கருணாநிதி தூண்டிவிடக் கூடாது.
சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் மூலம் எமது நாட்டை அழிக்கும் இந்திய
அரசியல்வாதிகளில் கருணாநிதியும் ஒருவர். இது அரசியல் ஆதாயத்துக்கான
தரம்குறைந்த தந்திரோபாயம்.
எமது நாடு சுதந்திரமான ஒரு நாடு என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தை உருவாக்க அவர் முயற்சிக்கக் கூடாது.
அவருக்கு ஈழத்தை அமைக்கும் விருப்பம் இருந்தால் அதை பெருமளவு தமிழர்கள்
வசிக்கும் தமிழ்நாட்டில் உருவாக்கட்டும் என கோத்தபாய ராஜபக்ச மேலும்
தெரிவித்துள்ளார்
|