கணணி தானாக Shutdown ஆகவும் தானாக Restart ஆகவும் வேண்டுமா? - இதோ இலவச மென்பொருள்

இன்றைய உலகில் கணினி உபயோகிக்காத இடமே இல்லை. சிறிய கடைகள் முதல் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் வரை உபயோகித்து கொண்டிருக்கும் இந்த கணினியின் செயல் பாட்டை அதிகரிக்க நாம் சில பயனுள்ள மென்பொருட்களை நம் கணினியில் நிறுவி இருப்போம். 

இந்த வரிசையில் நாம் இந்த மென்பொருளையும் நம் கணினியில் அவசியமாகிறது. 

பயன்கள்:

நாம் கணினியில் வேலை செய்து கொண்டு இருப்போம் திடீரென ஏதோ ஒரு முக்கியமான வேலையோ அல்லது ஞாபக மறதியாலோ நம் கணினியை அணைக்காமல் சென்று விடும். நம் வீட்டுக்கு போன பிறகு தான் ஞாபகம் வரும். அந்த நேரங்களில் நம் கணினியின் விவரங்களை மற்றவர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம். 

அந்த சமயங்களில் இந்த மென்பொருள் மிகவும் உபயோகமானதாக இருக்கும். இந்த மென்பொருளில் கொடுக்கப்பட்டுள்ள நேர அளவை பொருத்து உங்கள் கணினி தானாகவே Shutdown செய்யப்படும். 

இந்த மென்பொருள் மூலம் Automatic Restart செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. 

நீங்கள் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது அது டௌன்லோட் ஆகும் வரை காத்திருக்காமல் Time Remaining பார்த்து அதற்கேற்ற படி நேரத்தை செட் செய்து விட்டால் டவுன்லோட் ஆகி முடிந்ததும் உங்கள் கணினி தானாகவே அணைக்க பட்டு விடும். 

இந்த மென்பொருளில் Auto Shutdown, Auto Restart, Auto Logoff, Auto Hibernate ஆகிய வசதிகள் அடங்கி உள்ளது. 

மிகச்சிறிய அளவே உடைய (573.34kb) இலவச மென்பொருளாகும்.

பயன்படுத்தும் முறை

கீழே download பட்டனை க்ளிக் செய்து இந்த மென்பொருளை உங்கள் கணினியில் டௌன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது இந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். 


இதில் உங்களுக்கு தேவையான அளவு நேர இடைவெளியை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் தேர்வு செய்தால் ஒரு நாளைக்கு தான் தேர்வு செய்ய முடியும். 

வாரம் முழுவதும் குறிப்பிட்ட நேரத்தில் Shutdown ஆகவேண்டும் என நினைத்தால் கீழே உள்ள Every week on என்பதில் க்ளிக் செய்து இதில் உள்ள நாட்களை தேர்வு செய்து கொண்டு நேரத்தையும் தேர்வு செய்து கொள்ளவும்.

கீழே உள்ள பகுதியில் ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் Shutdown ஆக வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். 

இதில் குறிப்பிட்ட வேலைக்கு குறிப்பிட்ட Shortcut key செட் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

இதை செட் செய்ய Shorcuts tab க்ளிக் செய்து உங்கள் கீபோர்டில் ctrl அழுத்தி உங்களுக்கு வேண்டிய எழுத்தை அழுத்தவும். 

இனி நாம் நம் கணினியை அணைக்காமல் சென்றாலும் கவலை பட வேண்டியதில்லை நம் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளவும். 

இணையதள முகவரி
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now