இந்தியாவின் புதிய ஜனாதிபதி யார் ? : பெயர் பரிந்துரையில் சாம் பித்ரோடா

இந்தியாவின் புதிய ஜனாதிபதி யார் எனும் கேள்விக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்களில் குஜராத்தை சேர்ந்த தொழில் வல்லுனர் சாம் பித்ரோடா (Sam Pitroda) வினது பெயரும் அடிபடத்தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி பிரதீபா பாட்டிலின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதம் முடிவடைவதையிட்டு, இந்தியாவின் 16 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

துணை ஜனாதிபதி ஹமீட் அன்சாரி, சபாநாயகர் மீரா குமார், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, டாக்டர் கரண் சிங் ஆகியோரின் பெயர்கள் ஏற்கனவே ஜனாதிபதி பதவிக்கான பெயர் பரிந்துரையில் இருக்கும் நிலையில் சாம் பித்ராடோவின் பெயரும் இப்பரிந்துரை பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியின் அழைப்பின் பெயரில் அமெரிக்காவிலிருந்து அண்மையில் அவர் இந்தியாவுக்கு திரும்பியிருந்தது இந்த ஊகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் தொலைத்தொடர்பு மற்றும் கணணி புரட்சி ஏற்படுவதற்கு முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்த பித்ரோடா, இப்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்கள் தொடர்பான பிரதமரின் ஆலோசகராக இருக்கிறார்.  மம்தா பானர்ஜி மேற்கு வங்க ஆட்சியை கைப்பற்றுவதற்கும் இவருடைய ஆரூடத்தின் படியே நடந்து கொண்டதாகவும், சரத் பவார், நவீன் பட்னாய்க் ஆகியோருடனும் பித்ரோவுக்கு நல்லுறவு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரிசாவில் பிறந்தவரான பித்ரோடா ஒரிசா மொழியில் நன்கு பரீச்சயமானவர் என்பதுடன்  MS பல்கலைக்கழகத்தின் பௌதீயகவியலுக்கான பட்டப்படிப்பையும் மேற்கொண்டிருந்தார். பித்ரோடா ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவாராயின் நாட்டின் உயர் பதவி ஒன்றுக்கு தெரிவு செய்யபப்ட்ட முதலாவது குஜராதியாக இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now