ரணிலுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் முடிவு!




ஐ. தே. க. தலைவராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டதற்கு எதிராக தென் மாகாண சபை ஐ. தே க. உறுப்பினர் மைத்ரி குணரத்ன தாக்கல் செய்திருந்த மனுவை விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் ஐ. தே. க தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ. தே. க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க ஆகியோரை பெப்ரவரி 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி ஐ.தே.க. நிர்வாகிகள் தெரிவு நடைபெற்றது. இந்தத் தெரிவு முறைகேடாக இடம்பெற்றதாகவும் இதனை ரத்துச் செய்யுமாறும் கோரி இந்த மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நிர்வாகத் தெரிவின் போது அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முடிவடையும் வரை ரணில் விக்கிரமசிங்கவின் கட்சித் தலைமை பதவியை இடைநிறுத்துமாறும் மனுதாரர் கேட்டுள்ளார். மேற்படி மனு கொழும்பு மாவட்ட நீதிபதி ஜி.ஏ.டி. கனேபொல முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டது
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now