முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான
சரத்பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்திய பாரிய ஆர்ப்பாட்டமொன்று
எதிர்வரும் 8ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஜனநாயக விரும்பிகள் என சகல தரப்பினரும் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருப்பதாக ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.