யாழ். புதிய சிறைச்சாலைக்கான கட்டட நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. யாழ். புதிய சிறைச்சாலைக்கான கட்டட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம்.செனரத் பண்டார தெரிவித்துள்ளார். 2000 ற்கு மேற்பட்ட கைதிகளைத் தடுத்து வைக்கக்கூடிய வகையில் நவீன வசதிகளைக் கொண்டதாக இந்த புதிய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான நிர்மானப்பணிகள் 2013ம் ஆண்டு பூர்த்தியடையும் எனவும் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் ஏற்கெனவே நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
யாழில் நவீன வசதி கொண்ட புதிய சிறைச்சாலை
Labels:
இலங்கை

