வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் தனது இணைப்பாளர்கள் அல்ல – மேவின்

டொனாலட் மற்றும் அமல் ரொட்ரிகோ ஆகியோர்..
வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் தனது இணைப்பாளர்கள் அல்ல – மேவின்

 
வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்ட டொனாலட் மற்றும் அமல் ரொட்ரிகோ ஆகியோர் தமது இணைப்புச் செயலாளர்கள் அல்ல என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் தமக்கு எந்த செயலாளரும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
வெள்ளை வேன்களில் கடத்திச் செல்லப்பட்ட, டொனால்ட் ரஞ்சித், மெல் ரொட்ரிகோ ஆகியோர் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போதே மேர்வின் சில்வா இதனை கூறியுள்ளார்.
 
வாத்துவ தெற்கு கல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்து, கடந்த 7 ஆம் திகதி பிற்பகல் 1.45 அளவில், கார் ஒன்றில் கொழும்பு நோக்கி புறப்பட்ட ரங்கனகே டொனால்ட் ரஞ்சித் என்பவர், மொரட்டுவ குறுஸ் சந்தியில் வைத்து, வெள்ளை வேனில் சென்றவர்களினால் கடத்திச் செல்லப்பட்டார். இது சம்பந்தமாக ரஞ்சித்தின் மனைவி மொரட்டுவ காவற்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
 
 
அதேவேளை களனி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட அமல் ரொடரிகோ, சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், வெள்ளை வேனில் சென்றவர்களினால், நுகேகொட பிரதேசத்தில் வைத்து, கடத்திச் செல்லப்பட்டமை குறிப்பிடதக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now