பரீட்சை திணைக்கள நிர்வாக சிக்கல்களினால்..
உயர்தரப் பரீட்சை பெறுபேறு குளறுபடிகளுக்கு பரீட்சை திணைக்களமே பொறுப்புசொல்ல வேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறு குளறுபடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளது.
பரீட்சை திணைக்கள நிர்வாக சிக்கல்களினால் இந்த குளறுபடிகள்ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய மற்றும் பழைய பாடத் திட்ட மாவட்ட நிலைகள் ஒரே விதமாக பதிவுசெய்யப்பட்டதன் காரணமாக மாவட்ட நிலைகளில் குழப்ப நிலைமை ஏற்பட்டதாகசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேறுகளில் பிரச்சினை கிடையாது என ஆணைக்குழுதெரிவித்துள்ளது.
விசாரணை தொடர்பான சாரம்ச மற்றும் விரிவான இரண்டு அறிக்கைகள்ஜனாதிபதியிடம் நாளைய தினம் ஒப்படைக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பரீட்சை திணைக்களத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துமாறு ஆணைக்குழுபரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சின் செயலாளர் தாரா விஜேரட்னதலைமயிலான ஆணைக்குழு இந்த விசாரணைகளை நடத்தியிருந்தது.
