வீனஸ் கிரகத்தில் உயிரினம் ?



Venus.  Credit: NASAவீனஸ் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சூரிய குடும்பத்தில் பூமியை ஒத்த மற்றொரு கிரகமே வீனஸ் என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் வெள்ளி கிரகமாகும்.

இதன் விட்டம் 7 ஆயிரத்து 521 மைல்கள். பூமியின் விட்டமோ 7 ஆயிரத்து 926 மைல்கள் ஆகும்.

எனினும் இந்த வீனஸ் கிரகத்தின் மேற்பரப்பில் 97 சதவீதம் கார்பன் டைஆக்சைடு வாயுவே நிரம்பியுள்ளது.

சூரியனிலிருந்து 67.2 மில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இதன் வெப்பநிலை 480 டிகிரி செல்சியஸ் ஆகும்.

இத்தகைய தன்மை வாய்ந்த இந்த கிரகத்தில் உயிரினங்களின் வாழ்வு குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 1982 ஆம் ஆண்டு வீனஸ் 13 என்ற செயற்கை கோள் அனுப்பட்டது.

இந்த நிலையில், இதன்மூலம எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் லியோனிட் சான்பாமலிட்டி என்பவர் தற்போது மறு ஆய்வு செய்துள்ளார்.

இதன்போது அந்த புகைப்படத்தில் தேள் ஒன்றின் உடலமைப்பை கொண்ட உருவமும், தட்டு ஒன்றும் நகர்வது போன்ற காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தித்துள்ளார்.

இது ஆராய்ச்சியாளர்களிடையே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now