முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: இலங்கை அணியில் மஹ்ரூப், சானக்க



இலங்கை இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கை அணியில் பர்வீஸ் மஹ்ரூப், சானக்க வெலகெதர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சகலதுறை வீரர் பர்வீஸ் மஹ்ரூப் மற்றும் சானக்க வெககெதர ஆகியோர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜீன் மாதத்திற்கு பிறகு இலங்கை அணியின் ஒரு நாள் போட்டித் தொடர்களில் இடம்பெறவில்லை.

தென்னாபிரிகாவுடனான ஒரு நாள் தொடரில் இலங்கை அணி தோற்றதன் பின்னர் டில்சான் அணித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். இதனையடுத்து அணியின் தலைவராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டதோடு தொடர்ந்து அணியின் உபதலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் செயற்படுவார்.

இம் மூன்று அணிகளும் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 8 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இலங்கை அணியின் விபரம்: மஹேல ஜயவர்தன (தலைவர்), எஞ்சலோ மெத்தியூஸ் (உபதலைவர்), உபுல் தரங்க, திலகரட்ன டில்ஷான், குமார் சங்கக்கார (விக்கெட் காப்பாளர்), தினேஷ் சந்திமால் லஹிரு திரிமாண்ன, திசேர பெரேரா, பர்வீஸ் மஹ்ரூப், சானக வெலகெதர, ரங்கன ஹேரத், லஷித் மாலிங்க, நுவான் குலசேகர, சச்சித்ர சேனநாயக்க, தம்மிக பிரசாத்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now