புதிய அதிபர் நியமனம் தொடர்பில், கடந்த சில நாட்களாக முரண்பாட்டு நிலை ஏற்பட்டிருந்தது.
இதனை அடுத்து பெற்றோரும், பழைய மாணவர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
இந்த நிலையில், கல்லூரியின் அதிபராக ஆர்.உதயகுமார் என்பவரை இன்று நியமித்துள்ளதாக மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா தெரிவித்தார்.
இதேவேளை, இன்று பகல் மேல் மாகாண ஆளுனருடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது உதயகுமார் என்பவரை அதிபராக நியமிக்கும் தீர்மானம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்து வித்தியாவிருத்தி சங்கத்தின் அனுமதி இன்றி எந்தவொரு அதிபரையும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கு நியமிக்க முடியாது, என வித்தியாவிருத்தி சங்கத்தின் நிறுவனர் கந்தையா நீலகண்டன் தெரிவித்தார்.
சட்டமுறைகள் இருக்கின்ற போதிலும், அதனை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என நாடாளு மன்ற உறுப்பினர் பிரபா கணேசன் மற்றும் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நிலையில், தாம் இந்து மத சேர்ந்தவன் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு இந்துக் கல்லூரியின் அதிபராக நாளை பொறுப்பேற்கவுள்ள ஆர். உதயகுமார் தெரிவித்துள்ளார்.
