தென் அதிவேக பாதையில் மேலும் இரண்டு புதிய பேருந்துக்களை சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எம் டி பந்துசேன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த பேருந்துக்கள் நாளை முதல் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்சமயம் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள பேருந்துக்களுக்கு மேலதிகமாகவே இந்த பேருந்துக்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.
இதனிடையே, தென் அதிவேக பாதையில் நேற்றைய தினம் குறைந்தளவிலான வசதிகளை கொண்ட பேருந்து ஒன்று சேவையில் ஈடுப்படுத்தப்பட்டதாக எமது செய்தி பிரிவிற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்க பெற்றது.
தற்சமயம் சேவையில் ஈடுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள சொகுசு ரக பேருந்து ஒன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறுகள் காரணமாகவே குறைந்தளவிலான வசதிகளை கொண்ட பேருந்து சேவையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், திருத்தப்பாடுகளின் பின்னர் குறித்த சொகுசுரக பேருந்து சேவையில் ஈடுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தென் அதிவேக பாதையூடாக சேவையில் ஈடுப்பட ஐந்து தனியார் பேருந்துக்களுக்கு அனுமதியளிக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான கோரிக்கையினை அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளார்.
இதனிடையே, மஹரகமயில் இருந்து காலி வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்களில் 400 ரூபா பேருந்து கட்டணமாக அறவிடப்படுகிறது.
எனினும் கொழும்பில் இருந்து காலி வரை குறித்த பாதையூடாக தமது பேருந்துக்களில் 300 ரூபா மாத்திரமே கட்டணமாக அறவிடப்படும் எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்