உள்நாட்டிலும்
புலம் பெயர் நாடுகளிலுமுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு நாம்
இலங்கையர் பாதுகாப்பு படை’’ என்னும் அமைப்பினால் இறுதியாக மரண அச்சுறுத்தல்
என்னும் தலைப்பில் அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக
அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து இணையத்தளங்களில் செய்தி
வெளியிடுவோர், போராட்டங்களில் ஈடுபடுவோர் என பெயர் பட்டியல்களுடன் இவ்
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில்,
ஊடக சுதந்திரம் பறிபோன நிலையில் இவ் இறுதி எச்சரிக்கையானது பேனா முனையில்
மீண்டும் இரத்தம் சிந்துவதற்கு வழிகோலுவதாக அமைவதைச் சுட்டிக் காட்டுகிறது.

