இங்கிலாந்து ஆஸ்பத்திரிகளில் நடத்தப்பட்ட
கடந்த ஒரு வருட கால ஆய்விலிருந்து இது தெரியவந்ததாக அச்சஞ்சிகையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆஸ்பத்திரி பணிப்பாளர் வார இறுதி சேவைகளை
விஸ்தரிக்கும்படி கேட்டுள்ளார்.
லண்டன், பர்மிங்ஹாம் மற்றும் ஈஸ்ட் அங்கிலியா பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியினை தொடர்ந்தே இவ்வாய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாய்வில் அவசரமானதும் திட்டமிட்ட முறையில் அனுமதிக்கப்பட்ட 14 மில்லியன் அனுமதிகள் பரிசீலனை செய்யப்பட்டது.
2009 -2010ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட
187,300 நோயாளர்களில் 30 நாட்களில் உயிரிழந்த நோயாளர்கள் பற்றி ஆய்வு
நடத்தப்பட்டது. புதன்கிழமைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் 100 பேர்
மரணமானால் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் 116 பேர்
உயிரிழந்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சனி, ஞாயிறு தினங்களில் அனுபவம் வாய்ந்த
வைத்தியர்கள் விடுமுறையில் சென்று விடுவதால் சரியான சிகிச்சை இன்றியே
இவர்கள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
நாட்களைக் கொண்டு கணிக்கப்படும் ஒரு வகை மூட நம்பிக்கையை புகுத்தும் பதிவு என எவரும் எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே இறுதி பந்தியை நாம் தடித்த எழுத்தில் பதிந்துள்ளோம்


