மாலைத்தீவு ஜனாதிபதி பதவி மாறினாலும் உறவில் மாற்றமில்லையாம்: ஜனாதிபதி



மாலைத்தீவு ஜனாதிபதி பதவி விலகியமை அதன் உள்நாட்டுப் பிரச்சினை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மொஹமட் நசீட் பதவி விலகியமையால் இலங்கை - மாலைத்தீவு உறவில் எதுவித விரிசலும் ஏற்படாதென இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மொஹமட் நசீட் இலங்கை ஜனாதிபதியுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு விடயத்தில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now