யாழ்ப்பாணத்திலிருந்து 3000 குடும்பங்களாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் இன்று 10,000 குடும்பங்களாக பெருகியுள்ளதால் அவர்களது மீள்குடியேற்றத்தில் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக யாழ். மாநகரசபை பிரதி மேயர் றமீஸ் தெரிவித்தார்.
நபி முகமது (ஸல்) பிறந்த தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை இன ஐக்கியத்துக்கான ஒன்றுகூடல் நிகழ்வு யாழ்.முஸ்லீம் பிரதேசத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் இறுதி நாளான இன்று (08) புதன்கிழமை நடைபெற்ற விசேட விருந்துபசார ஒன்றுகூடல் நிகழ்வில் கல்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
3000 குடும்பங்களாகச் சென்றவர்கள் தற்போது 10,000 குடும்பங்களாகப் பெருகியுள்ளதால் இவர்களை சொந்த இடத்தில் மீள்குடியேற்றுவதற்கான இடங்கள் போதாது உள்ளதாகவும் யாழ். மாநகரசபை பிரதி மேயர் றமீஸ் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்திலிருந்து முஸ்லீம் மக்கள் நிர்ப்பந்தத்தில் வெளியேற்றப்பட்டதைப் போன்று, தற்போதும் நிர்ப்பந்தத்தின் பெயரிலேயே மீள்குடியேற்றப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

