நாட்டின் சகல மாவட்டங்களிலும் மும்படையினரும் தயார் நிலையில்
பயங்கரவாதம்
மற்றும் மக்கள் கிளர்ச்சி போன்றவை நாட்டில் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை
தடுக்க, நாட்டின் சகல மாவட்டங்களிலும் இராணுவத்தினர் தயார் நிலையில்
வைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த பணிப்புரையினை, அவர் சார்பாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நாடாளுமன்றத்தில் முன் வைத்தார்.
பயங்கரவாத
நடவடிக்கையோ, அல்லது மக்கள் கிளர்ச்சியோ ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே
இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.