சீருடைகள் வழங்கப்படாததால் மாணவர்கள் சிரமம்


இந்த வருடத்திற்காக பாடசாலை சீருடைகளை வழங்க அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதனால் பாடசாலை மாணவர்கள் மாத்திரமன்றி பெற்றோர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார்.

சீருடைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்தபோதிலும், அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகளை கல்வி அதிகாரிகள் இதுவரை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களின் சீருடைகளுக்காக 1525 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் அவற்றினை மாணவர்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சங்கத்தின் பிரதம செயலாளர் கூறியுள்ளார்.

வழமையாக ஜனவரி மாத்தின் ஆரம்ப பகுதிக்குள் சீருடை வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கல்வி பிரதியமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸாவிடம் நாம் வினவியபோது மார்ச் மாதத்திற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now