புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கட் அணியின்
துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங், விரைவில் குணமடைய வேண்டும் என இலங்கை
கிரிக்கட் அணித் தலைவர் மஹேல ஜெயவர்தன விருப்பம் வெளியிட்டுள்ளார்.
யுவராஜ் சிங் புற்றுநோயால் பீடிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பில் அதிர்சியடைந்ததாக மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங் தற்போது அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஏற்கனவே அவர் உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளின் போது, இரத்தவாந்தி
எடுத்தமையே, புற்றுநோய்க்கான ஆரம்பக்கட்ட அறிகுறி என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அதனை அவர் கருத்தில் கொண்டிருக்கவில்லை.
எவ்வாறாயினும், யுவராஜ் சிங்கிற்கு நுரையீரலுக்கு வெளியில் புற்றுநோய்
கட்டிகள் உருவாகி உள்ளது எனவும், இதனை 9 வாரங்களில் குணமாக்கி விட
முடியும் எனவும் அவருக்கு சிகிச்சை வழங்கி வரும் இந்திய வைத்திய குழுவின்
வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.