சட்டத்தின் ஆட்சி நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. கடத்தல்கள்
அதிகரிக்கின்றன. வாழ்க்கைச் செலவு உயர்வு வானளாவ உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மக்களை ஏமாற்றுவதற்காக இந்த ஆர்ப்பாட்டங்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன அவர் கூறினார்.
அதேவேளை, மனித உரிமை மீறல்; விவகாரங்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இன்று உள்ளூர் ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எழுப்பப்பட்டுள்ள மனித உரிமை மீறல் கரிசனைகளை அரசாங்கம் எதிர்நோக்கியிருக்கத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

