பொரளையைச் சேர்ந்த பி.என். நில்மினி சமந்தி அல்லது நிலுகா என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு அவர் 40.8 கிராம் ஹொரோயினை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அவருக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பி.பத்மன் சூரசேன இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

