சீனாவின்
ஷென்சன் நகரில் நடந்த மகளிருக்கான பெடரேஷன் கோப்பை ஆசிய ஓசியானியா
குரூப்,2 போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவில்
சானியா மிர்சா 5,7, 6,0, 6,1 என்ற செட்களில் லிங்க் சாங்கை வென்றார்.
இரட்டையர்
போட்டியில் இஷா லக்கானியுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய சானியா அபாரமாக
செயல்பட்டு 6,7, 6,1, 7,5 என்ற செட்களில் வெனிஸ், ஷாங் ஜோடியை வீழ்த்த
முக்கிய காரணமாக இருந்தார்.
மற்றொரு
ஒற்றையரில் இந்தியாவின் ரிதுஜா 4,6, 1,6 என்ற செட்களில் ஷானிடம் தோற்றார்.
இதன் மூலம் இந்திய அணி 2,1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதுடன், குரூப்,1
சுற்றில் விளையாட தகுதி பெற்றது.

