மாலைத்தீவில் ஜனநாயக வழியில் தெரிவான முதலாவது ஜனாதிபதியான மொஹமட் நசீட், முக்கிய நீதியரசர் ஒருவரை கைது செய்ய விடுத்த உத்தரவின் பின் ஏற்பட்ட எதிர்ப்பால் பதவி விலகினார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானின் சிறுவர் நிதியம் என்பவற்றில் கடமையாற்றியுள்ள மொஹமட் வஹீட் ஹசன் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

