தமிழீழ
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயதைக் கொண்ட
கடைசி மகனும் வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டார் என்ற
தகவலை பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி தயாரித்துள்ள புதிய காணொளியில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இடம்பெற்ற யுத்தத்தின் போது
இலங்கை இராணுவம் புரிந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த காணொளியில்
ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
’இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத குற்றங்கள்’ என்ற
தலைப்பைக் கொண்ட இந்தக் காணொளி சனல் 4 தொலைக்காட்சியில் எதிர்வரும்
புதன்கிழமை (14) இரவு இலங்கை நேரப்படி இரவு 10.55க்கு ஒளிபரப்படவுள்ளது.
