இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை உடனடியாக மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சின் செயலாளரை பணித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் அந்தப் பெண் மரணமடைந்தமைக்கான காரணம் பற்றிய விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மரணமடைந்த பெண்ணிற்கு வழங்கப்பட்ட மருந்துகளில் இரண்டு காலாவதியாகியுள்ளதாக மரண பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

