அதேபோன்று 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி சுட்டு
வீழத்தப்பட்ட இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ‘அன்டனோ’ விமானத்
தாக்குதலுக்கும் ரஷ்ய ஏவுகணைகளே பாவிக்கப்பட்டன. இந்த விமானத்தின் மீது
தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வேறு சில விமானங்கள் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தமையும்
விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள்
இருவரும் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் விமானம் மீது
தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுதத்திய ஏவுகணையின் சிதைந்த பாகங்களும்
நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டன என்றும் அந்தச் செய்திகள்
தெரிவிக்கின்றன.-வர்மா

