யாழ்ப்பாணத்தில் மின்சார விநியோக தடை


யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் தினங்களில் மி;ன்சார விநியோகம் தடை செய்யப்படும் என இலங்கை மின்சார சபையின் சுண்ணாகம் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Reading by Hurricane Lamp

 
இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் தடைசெய்யப்படும்.
 
இதற்கமைய கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடமாவடிப்பகுதி, பாற்பண்ணைப் பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவ பீட பிரதேசம், ஆடியபாதம் வீதி, கொக்குவில் சந்தி வரையிலான பிரதேசம், கல்வியம்காடு, நல்லூர் அரியாலை மற்றும் தென் மராட்சி பிரதேசம் ஆகிய இடங்களில் இந்த மின்சார விநியோகம் தடைப்படும்.
 
அத்துடன், சுண்ணாகம், குப்பிளான், மயிலங்காடு, காங்கேசன்துறை உயர் பாதுகாப்புப் பகுதி, மல்லாகம், ஏழாலை. தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான், உறும்பிராய், ஊரெழு பிரதேசத்தின் ஒரு பகுதி, கோண்டாவில் டிப்போவை அண்டிய பிரதேசம் ஆகிய பிரதேசங்களில் இந்த மின்சார தடை அமுல்படுத்தப்படும் என சுண்ணாகம் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
வீதி அபிவிருத்தி பணிகளுக்காக உயர்அழுத்த  மின்சார விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்ய வேண்டியதன் காரணமாகவே இந்த தடை அமுல்ப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now