இஸ்ரேல் வந்த பான் கீ மூன் மீது, ஷூ,கற்களை வீசி தாக்குதல் நடத்திய ஆர்ப்பாட்டக்க்காரர்கள்.

     A shoe attack to Ban Ki Moon in Isrel.
இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையில், ஐ.நா. பொதுச்செயலர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷூ, மற்றும் கற்களை வீசினர். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு எட்டப்படமால் உள்ளது.

இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன், நேற்று இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் எல்லைப்பகுதியான காஸா பகுதிக்கு வருகை தந்தார். காஸா பகுதியில், ஜப்பானின் நிதிஉதவியுடன் எல்லைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி திட்டத்தை துவக்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள பான்கீமூன் வந்தார்.

அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பான்கீமூன், கார் வரும் கன்வாய் வழியாக , அவருக்கு எதிராக 50-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கோஷங்கள் எழுப்பினர், சிலர் அவர் சென்ற கார் மீது ஷூ மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பான்கீமூ‌னுக்கு எந்த வித காயமும் ஏற்படவில்‌லை.

இது தொடர்பாக 50 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இவர்கள், இஸ்ரேல் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனவும், இஸ்ரேல்-பால்ஸ்தீன பிரச்னையில் ஐ.நா. வின் செயல்பாட்டை கண்டித்தும் இத்தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now