இலங்கை அதிபர் மகிந்த அமெரிக்காவிடம் ஒரு காலத்தில் சரணடைந்திருந்தார் !


இலங்கையின் இன்றைய அதிபர் மஹிந்த ராஜபக்ஸ 1988- 89 காலப் பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசின் நீதிக்கு புறம்பான கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் போன்றவற்றுக்கு எதிராக அமெரிக்காவிடம் முறைப்பாடு செய்து உள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்ற இரகசிய ஆவணக் குறிப்பில் இவ்விபரம் உள்ளது. அமெரிக்க தூதுவர் Jeffrey J. Lunstead 2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி இந்த இரகசிய ஆவணத்தை அனுப்பி இருக்கின்றார்.

விக்கிலீக்ஸ் இவ்வாவணத்தை வெளியில் விட்டு உள்ளது.

1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவும், சகபாடிகளில் சிலரும் தோல்வி கண்டனர். இந்நிலையில் மஹிந்தர் கொழும்பு மற்றும் தென்பகுதியில் சட்டத்தரணியாக நீதிமன்றங்களில் ஆஜரானார். குறிப்பாக ஜே.வி.பி சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வாதாடினார். இதனால் மனித உரிமைகள் சட்டத்தரணி என்கிற அங்கிகாரத்தை ஜே.வி.பியினர் மத்தியில் பெற்றுக் கொண்டார். 1988- 89 களில் அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் அரசின் நீதிக்கு புறம்பான கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணமல் போதல்கள் குறித்து முறைப்பாடுகள் செய்தார்.

மஹிந்தரின் இன்றைய அரசியல் எதிரிகளில் ஒருவரான மங்கள சமரவீர இந்நடவடிக்கையில் மஹிந்தருடன் பங்கேற்று இருந்தார். அன்னையர் முன்னணி என்கிற மனித உரிமைகள் அமைப்பை மஹிந்தர் 1988 இல் உருவாக்கினார். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் காணாமல் போன ஜே.வி.பியினருக்கு நீதியை பெற்றுக் கொடுக்கின்றமைக்கு இவ்வமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
இவ்வமைப்பை கட்டியெடுப்பதில் மங்கள சமரவீரவும் காத்திரமாக பங்களித்து இருந்தார். 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் வந்த மஹிந்தர் அடிப்படை மற்றும் மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பேரவையின் செயலாளர் ஆனார்.

மனித உரிமைகள் மற்றும் சட்ட உதவிகள் நிலையத்தின் பணிப்பாளர் ஆனார். மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றுக்கு அடி பணியாமல் மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்த சொற்ப அளவிலான சட்டத்தரணிகளில் இவரும் ஒருவர். இவ்வாறு இரகசிய ஆவணத்தில் உள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now