அதிகமா ஜங்க் புட் சாப்பிடுவது ஆண்மைக்கு ஆபத்து – ஆய்வில் தகவல்

Junkfood

பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட ஜங்க் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்லும் இளைய தலைமுறையினர், வீட்டில் இருந்து உணவை எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் இன்றைக்கு பாஸ்ட் புட், ஜங்க் புட் உணவுக்கடைகள் காளன் போல முளைத்துவிட்டன. அங்கு சென்று பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதே இன்றைக்கு வழக்கமாகிவிட்டது. இதனால் நிறைய இளைஞர்களுக்கு ஆண்மைக்குறைவும், மலட்டுத்தன்மையும் ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுகிறது.

குறையும் உயிரணுக்கள்

இதுகுறித்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம், ஸ்பெயினின் முர்சியா பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வு முடிவில் ஊட்டச்சத்து உணவை சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் புட் எனப்படும் நொறுக்கு தீனி, சாட் வகைகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நொறுக்கு தீனி, சாட் வகைகளை தொடாத இளைஞர்களைவிட அவற்றை சாப்பிடும் இளைஞர்களில் உயிரணுக்கள் சரியாக இருந்தவர்களுக்கும் இத்தகைய பிரச்னை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான உடல் எடை, உடற்பயிற்சி பழக்கத்துடன் இருந்தவர்களிடமும் இது ஏற்பட்டது தெரிந்தது.

இதே விசயத்தில் ஜப்பானில் 215 இளைஞர்களிடம் நடந்த சோதனைகளில் இது நிரூபணமானது.

டிரான்ஸ் பேட் கொழுப்பு

தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால் இந்த நொறுக்கு தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு எச்சரிக்கை

இதேபோல் ஜங்க் புட் அதிகம் உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சரிவிகித உணவு உட்கொள்ளும் குழந்தைகளை விட ஜங்க் புட் உட்கொள்ளும் குழந்தைகளில் மூளை வளர்சி விகிதம் பாதிக்கும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் 14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள், பாக்கெட் சிப்ஸ் போன்றவைகளை வழங்குவதை தவிர்த்து காய்கறிகள், பழங்கள், சத்தான பயறுவகைகளை உணவாக வழங்கவேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now