
இந்த மனித உரிமைகள் மகாநாடு
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் எதிர்வரும் 27ம் திகதியன்று ஆரம்பமாகி
மார்ச் மாதம் 23ம் திகதி நிறைவுபெறும்.
யுத்தம் முடிவடையும் கடைசி நாட்களில்
இலங்கையில் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது
என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டுவதற்கு இந்த கொள்கை விளக்க அறிக்கையில்
நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதென்றும் அமைச்சர் தெரிவித்தார். இது
சம்பந்தமாக குடிசன மதிப்பீட்டு திணைக்களம் எடுத்த புள்ளிவிபர தகவல்களும்
இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தப் புள்ளிவிபர அறிக்கை
பக்கச்சார்ப் பானது என்று எவராலும் குற்றம் சுமத்த முடியாது என்றும்
அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கொள்கை விளக்க அறிக்கையை
தயாரிப்பதற்காக வடபகுதியில் மாவட்ட செயலக காரியாலயத்திலும், பிரதேச செயலக
காரியாலயத்திலும் சேவையிலுள்ள தமிழ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன்
இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறதென்றும் அமைச்சர் கூறினார். எனவே,
இவ்வறிக்கை பக்கச்சார்பற்றது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த உச்சி மாநாட்டின் கூட்டத் தொடரில்
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் எத்தகைய குற்றச்சாட்டுகளுக் கும்
சவால்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கக்கூடிய வகையில் அங்கு சென்றிருக்கும்
தூதுக்குழுவினர் இருக் கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த உச்சிமாநாட்டில் மஹிந்த
சமரசிங்கவுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், நீர்ப்பாசன
நீர்வழங்கல் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுற்றாடல் பாதுகாப்பு
அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ்
குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.