
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீரை கொலை செய்ய முன்னாள் ஜனாதிபதி முஷாரப் இருமுறை சதித் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியில்,
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரப் கடந்த 2007ம் ஆண்டு நாடு திரும்ப
முயன்ற அந்நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய சதி
திட்டம் தீட்டினார்.
இதற்காக நம்பிக்கைக்கு உரிய இரு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தக்ரீக் இ
தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பைத்துல்லா மசூத் ஆகியோரின் துணையுடன்
இதற்கான சதிதிட்டம் தீட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை அறிக்கை அந்நாட்டு சிந்துமாகாண சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


