நுவரெலியா
மாவட்டத்தில் சமு ர்த்தி வங்கிகளில் நிதி மோசடி செய்த 18 சமுர்த்தி
உத்தியோகஸ்தர் களை பதவி நீக்கம் செய்துள்ளதாக சமுர்த்தி திணைக்களம்
கூறியது. 40 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்தது தெடர்பிலே இவர்கள் பதவி
நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு மற்றொரு சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமுர்த்தி ஆணையாளர் பந்துல திலகசிறி கூறினார்.
2005 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்ட சமுர்த்தி வங்கிகளினூடா கவே இவ்வாறு நிதி மோசடி செய்யப் பட்டுள்ளன.
2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட கணக்காய்வின் போது நிதி மோசடி
குறித்து தகவல் கிடைத்துள் ளது. இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையின்
போது சமுர்த்தி பெறு வோர் என போலியான பெயர்களை சமர்ப்பித்து சமுர்த்தி
வங்கிகளில் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
19 சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் இவ்வாறு இணைந்து நிதி மோசடி செய்துள்ளது
தெரியவந்ததையடுத்து அவர்களுக்கு எதிரான விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இவர்கள் நிதி மோசடி செய்துள்ளது. நிரூபணமானதையடுத்து 18 சமுர்த்தி
உத்தியோகஸ்தர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சமுர்த்தி ஆணையாளர்
கூறினார்.