கொள்ளுபிட்டி ஹோட்டல் அறையில் தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்வம்
தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று (01) காலை 7 மணியளவில் கைது
செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுபிட்டி 5ம் குறுக்கு வீதியில் வசிக்கும் தமிழர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
திருமணம் முடித்து பிரித்தானியாவில் கணவருடன் வாழ்ந்துவந்த 48 வயதான சுதர்ஷினி சஹீலா பிரித்தானியாவில் தனது கணவர் தன்னை கைவிடவே இலங்கைக்கு வந்துள்ளார்.
இலங்கையில் அவர் கொள்ளுபிட்டி பகுதியில் வசித்து வந்த வேளை, அங்குள்ள தமிழ் இளைஞனை இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.
இவ்விருவரும் முதல் இரவுக்காக கொள்ளுபிட்டி ஹோட்டலில் தங்கியிருந்த போது கணவரால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் குறித்தப் பெண்ணின் நகை, பணம் என்வவை பாதுகாப்பாக ஹோட்டல் அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் பணத்திற்கான கணவர் இக்கொலையை செய்திருக்க மாட்டார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


